FixNix Blog

Cyber Security Crime - BitCoin (Digital Money of Digital World)

Nov 19, 2017 5:10:19 AM / by Prasanna Venkatesh

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்காக தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு (ஐ.டி. செக்யூரிட்டி) துறையில் முன்னணியில் இருப்பவர்களில் சண்முகவேலும் ஒருவர். மைக்ரோசாப்ட் ஐ.பி.எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பதவிகளில் இருந்தவர். தற்போது, பிக்ஸ் நிக்ஸ் என்கிற நிறுவனத்தை தனியாக தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இநத நிறுவனம் ரெக்டெக் 100 , இந்தியா பின்டெக் அவார்ட், கொலம்பியா மேலாண்மை கல்லூரி டாப் 26 கண்டுபிடிப்பாளர்.....என உலக அளவில் 20-க்கும் மேற்பட்ட அவார்டுகளை பெற்றிருக்கிறது.

சைபர் க்ரைம் விவகாரங்களில் உலக அளவில் தற்போது சவாலாக இருப்பது 'பிட் காயின்'தான் என்று என்று ஆரம்பித்தார்...
" உலகில் 30 வகையான டிஜிட்டல் கரன்சிகள்( லைட் காய்ன், பிபி காய்ன், நேம் காயின், ஃபெதர்காய்ன்) புழக்கத்தில் உள்ளன. அவைகளில் பிரபலமாக விளங்குவது பிட் காயின். தெரியாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் பண பரிவரித்தனை செய்துகொள்ளமுடியும். 2009&ட் சடோஷி நகமோடோ(மர்ம பெயர்) என்பவர் பிட்காய்னை புழக்கத்தில் விட்டார். படிப்படியாக இந்தக் காய்ன் பிரபலமாகிவிட்டது.

சட்டவிரோத ஆயுத விற்பனை, பயங்கரவாத அமைப்புகளுக்கு பண பரிமாற்றம், அண்டர் வேர்ல்டு போதை கடத்தல் புள்ளிகள், ஆன் லையன் சூதாட்டம்.. என பண பரிமாற்றங்கள் பிட்காயின் மூலம் நடப்பதாக உலக நாடுகள் அலறுகின்றன. பிட்காயின் பண பரிவர்த்தனை மூலம், அமெரிக்க புலனாய்வு துறை, சுமார் மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை போதை கடத்தல் கும்பல்களிடம் இருந்து பறிமுதல் செய்திருக்கிறது. இப்போதுதான் இந்தியாவில் பயன்பாடு தொடங்கி இருக்கிறது. மும்பை போன்ற நகரங்களில் பிட்&காயின் மூலம் போதை கடத்தல் கும்பலுக்கு பண பரிமாற்றம் செய்து, கூரியர் தபாலில் போதை அயிட்டத்தை பெறுவதை போலீஸார் பிடித்துள்ளனர். மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவை பிட்காயின் பயன்படுத்தி செய்ய முடியும்.

'பிட் காயின்' என்பது டிஜிட்டல் பண பரிவர்த்தனை. இதை நாம் கண்ணால் பார்க்க முடியாது. பிட்காயினை டெக்னாலஜி மூலம், ஒருவர் மற்றவருக்கு நேரடியாக பணம் அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்றும் தெரியாது, பெறுபவர் யார் என்றும் தெரியாது. இந்த டெக்னாலஜியின் பெயர் பிளாக் செயின். பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கம்யூரிட்டர், இண்டர்நெட்டில் சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. தற்சமயம் ஒரு பிட்காயின் 7, 000 டாலருக்கு மேல் வர்த்தகமாகிறது. ரூபாய், டாலராக வைத்திருக்காமல் பிட்காயின் வைத்திருக்கலாம் என்கிறார்கள் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள்.

பிட்காயின்கள் வாங்க மற்றும் விற்பதற்காக உலகம் முழுவதிலும் எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவிலும் ஜெப்பே, காயின்செக்யூர் , யுனோகாயின் உள்ளிட்ட எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன.

அனுப்புவது யார், எடுப்பது யார் என தெரியாததால் முறையற்ற பணம் இங்கு பதுக்க வாய்ப்பு இல்லை. காரணம் இந்த எக்ஸ்சேஞ்ச்கள் ரொக்கமாக வாங்குவதில்லை. இவை அனைத்தும் டிஜிட்டல் கரன்ஸி ஆகத்தான் வாங்குகிறார்கள். தவிர கே.ஒய்.சி இல்லாமல் பிட்காயின் வாங்க முடியாது.
ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. பண வீக்கத்தையும் உருவாக்க முடியாது. தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. உலகின் முதல் 'பிட்காயின்'-டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் சென்டரை கனடா நாட்டில் நிறுவியுள்ளனர். ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும். கனடாவில் சில காபி ஷாப்&களில் கூட பிட் காயினை தரலாம்.

 

Topics: fixnix, FixNix GRC, Governance, grc, ICO, Infosys Finacle, bitcoin, cloud GRC, compliance, cyber security, cybersceurity, cybersecurity Crime, Digital Money, risk

Prasanna Venkatesh

Written by Prasanna Venkatesh

Subscribe to Email Updates

Lists by Topic

see all

Posts by Topic

see all

Recent Posts